ஹூஸ்டன் பல்கலை கழக தமிழ் இருக்கையின் செயலி தமிழ் மொழியில் வெளியீடு.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான ரூ15. கோடி மதிப்பிலான நிதி திரட்டும் முன்னெடுப்புகளின் அங்கமாக தமிழ் இருக்கை குறித்தான தகவல்கள் அறிய தமிழ் செயலி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ் இருக்கையை அமைக்க அமெரிக்க வாழ் தமிழரான சாம் கண்ணப்பன் தலைமையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச் செயலியை விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் மற்றும் தமிழ் இருக்கையின் இந்திய ஆலோசகர் வி.ஜி .சந்தோஷம் , தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோரின் தலைமையில் இச் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கால்டுவெல் வேல்நம்பி பேசுகையில் ,
தமிழ் இருக்கையின் செயலி மூலம் இணைய வழி நூலகம் , தமிழ் நாட்காட்டி , தமிழ் எழுத்து வரைவுகள் ஆகியவற்றை மிக எளிதில் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழியே இருக்கையின் நிர்வாக குழுவினரை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளாலாம் என்று அவர் தெரிவித்தார்.