வீட்டுவசதித் துறையில் புதிய தொலைநோக்கு திட்டம். பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி பாராட்டு.

bcc6ffc1-3751-46d3-8a5e-6d16d8cf0412

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கும், வீட்டுவசதி துறைக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் இதுவரை 750 ச.மீ நிலப்பரப்பில் 3 வீடுகள் வரை கட்டப்படும் தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது .

இனி 750 ச.மீ நிலப்பரப்பில் 8 வீடுகள் வரை கட்டப்படும் தரைதளம் மற்றும் மூன்று அடுக்கு கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்கு வரை கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 12 மீட்டர் வரை கட்டுவதற்கு அனுமதித்தது.

இனி தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்கு வரை கட்டப்படும் கட்டடங்களின் உயரம் 14 மீட்டர் வரை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய, மக்களுக்கு மிகவும் பயனுள்ள வரலாற்று சிறப்புமிக்க, திட்டங்களை அரசாணையாக வெளியிட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

About Author