ரோட்டரி சங்கம் சென்னை கேலக்ஸி சார்பில் சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவ மனையில், அன்பின் தாய்-சேய் சிலை திறப்பு விழா
ரோட்டரி சங்கம் சென்னை கேலக்ஸி சார்பில் சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவ மனையில், புதுபொலிவுடன் எதிர்பார்ப்பில்லாத அன்பின் தாய்-சேய் சிலை திறப்பு விழா.
இவ்விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு MLA, மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் MP, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார்கள். பின்னர் தாய்சேய் சிலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் எழும்பூர் அரசினர் குழந்தைகள் நல மருத்துவர் திருமதி F. எழிலரசி, ரோட்டரி கிளப் சென்னை கேலக்ஸி தலைவர் திரு.T.E. கிரிதர ராஜா, செயலாளர் திரு. G. பழனி, பொருளாளர் திரு.K.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.