தமிழ்நாட்டில் முதல் மற்றும் மிகப்பெரிய ‘ஹெலிகல் டோமோதெரபி’ திட்டத்தை அறிமுகம் செய்யும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

இம்மாநிலத்தில் முதல் ரேடிஸாக்ட்X9 டோமோதெரபி மற்றும் இந்தியாவின் முதல் உயர் துல்லிய TMI/TMLI செயல்திட்டம் இதுவே

சென்னை: 4 மே 2023: இந்தியாவில் மிக விரிவான, நவீன புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் தனது செயல்நோக்கத்தையொட்டி டோமோதெரபி என அழைக்கப்படும் மிக நவீன, புற்றுநோய்க்கு எதிரான சிகிச்சை தொழில்நுட்பத்தின் சமீபத்திய தொகுப்பினை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC) அறிமுகம் செய்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் . கனிமொழி கருணாநிதி, தமிழ்நாட்டின் முதல் ரேடிஸாக்ட்X9 டோமோதெரபி மற்றும் இந்தியாவின் முதல் உயர் துல்லிய TMI/TMLI செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார். விமரிசையாக நடைபெற்ற இவ்விழா நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் – ன் செயலாக்க துணை தலைவர் மிஸ். ப்ரீத்தா ரெட்டி, அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரண் பூரி மற்றும் அதன் மருத்துவ இயக்குனர் & புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர். ராகேஷ் ஜலாலி, புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் முதுநிலை ஆலோசகர்களட டாக்டர். சப்னா நாங்கியா மற்றும் டாக்டர். ஸ்ரீனிவாஸ் சிலுகுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரோக்கியமான திசுக்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்படும் சேதத்தை பெரிதும் குறைக்கும் அதே நேரத்தில் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கலில் அதிக துல்லிய மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை தருகின்ற இதன் சுருள்வடிவ டோமோதெரபி தொழில்நுட்பத்தின் காரணமாக, ரேடிஸாக்ட்X9 டோமோதெரபியை தமிழ்நாட்டில் வழங்கும் மற்றும் உயர் துல்லிய TMI/TMLI செயல்திட்டத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் மருத்துவ மையம் என்ற பெருமையை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் இப்போது கொண்டிருக்கிறது.

About Author