தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி

b7b1cbab-2f67-49e6-8b3f-c9bea4697833

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (21.01.24) அன்று மாலை 7:00 மணியளவில் *மாநில செயலாளர்கள் அன்சாரி மற்றும் முஹ்ஸின் ஆகியோர் தலைமையில் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் T.A .அப்பாஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கிவைக்க மாநில செயலாளர் முஹ்ஸின் அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக ஒரு மாதகால செயல்திட்டமான சமூக தீமை(வட்டி, வரதட்சணை, மதுபோதை, புகை, விபச்சாரம், ஆடம்பர திருமணம்)களுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் எனும் செயல்திட்டம் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் தாஃயிக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இறுதியாக இச்செயல்திட்டம் ஏன்?எதற்கு? எனும் தலைப்பில் *மாநில செயலாளர் அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தி மக்களை ஆர்வமூட்டினார்.

About Author