தமிழக இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்க இருக்கும் அன்பாலயா அகாடமி 

F0A94016-B483-4147-AF60-49BF666934F7

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி சென்னை பிராட்வே பகுதியில் 300 ஏழை மகளிருக்கு இலவச சேலைகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பாலயா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி ஷர்மிளா, அன்பாலயா அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் சங்கர் சாக்ரடீஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தார். 

நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கரின் அருமை  பெருமைகளை எடுத்துரைத்தனர். 

அன்பாலயா அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் சங்கர் சாக்ரடீஸ் பேசுகையில், பிரதமர் மோடியின் கனவுகளை நனவாக்கும் வகையில் அன்பாலயா அறக்கட்டளையின் சார்பில், விரைவில் அன்பாலயா அகாடமி (ANBHALAYAA Academy) தொடங்கப்பட இருப்பதாகவும், அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். 

மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் தொடங்க இருக்கும் அன்பாலயா அகாடமியில் மிக குறைந்த பயிற்சி கட்டணமே பெறப்படும் என்றும், இங்கு பயில்வோருக்கு தொழில் நிறுவனக்ளில் நேரடி கள அனுபவம் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், ஆர்வத்துடன் திறன்களை வளர்த்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, சுய தொழில் தொடங்கி முன்னேற கடனுதவி செய்து தரப்படும் என்றும், ன்பாலயா அகாடமி மூலமாக, தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோர் உருவாகப்போவது உறுதி என்றும் டாக்டர் சங்கர் சாக்ரடீஸ் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை அன்பாலயா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி ஷர்மிளா, அன்பாலயா அறக்கட்டளையின் அறங்காவலர் திரு.திருஞானம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author