தமிழக அரசுக்கு பெயிரா நன்றி பாராட்டு!
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும் நன்றி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் கடந்த 20/10/2016 வரை அனுமதியற்ற பட்டா மனைகளை வாங்கவும் விற்கவும் அரசு அனுமதித்தது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையால், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அனுமதியற்ற மனைகளையும், வீட்டுமனை பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்து அரசாணை வெளியிட்டு தீர்வு கண்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் (HACA) மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் எல்லைக்குட்பட்ட சுமார் 24 மாவட்டங்களில் மலைப்பகுதிகளின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்களில், மேற்கண்ட வகையில் பட்டா நிலங்களை அனுமதியற்ற முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவுகளையும், அதில் பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள மனைகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில், அரசு வாய்ப்பினை ஏற்படுத்தி கடந்த 30/03/2020, அரசாணை எண். 66/2020 ஆக வெளியிட்டு வழிவகை செய்து தீர்வு கண்டது.
இந்த வாய்ப்பினை மேற்கண்ட மலைப்பகுதிகளின் அருகில் மனைகளை வாங்கி வைத்துள்ள பல பொதுமக்களும், வீட்டு மனை அபிவிருத்தியாளர்களும் தவறவிட்டனர். இவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தொடர்ந்து தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, இவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கி எதிர்வரும் 2024 நவம்பர் 30ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்து அரசாணை எண். 132/2024 ஆக வெளியிட்டு வழிவகை செய்து, தீர்வினை ஏற்படுத்தி தந்தமைக்கு மேற்கண்ட FAIRA சார்பில் தமிழக அரசுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகளையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.