தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமுல்படுத்திடுக. ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம்

b669b4ca-4526-474e-8b99-a799ecd7088f

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரியும், கள்ள சாராய விற்பனையை தடுத்திடவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை ஓழிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி மற்றும் காமராஜர் மக்கள் கட்சி இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கினார்

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனமான டாக்டர் பாரிவேந்தர், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் கண்டன உரையாற்றினார்

உடன் கட்சி பொது செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ராஜன், அமைப்பு செயலர் எஸ்.எஸ் வெங்கடேசன், மகளிரணி மாநில செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், தலைமை நிலைய செயலாளர் ஏ.கே.டி வரதன், துணை பொது செயலாளர் ரவி பாபு,
இளைய வேந்தர் பேரவை தலைவர் அனந்தமுருகன்,
மாநில போராட்ட குழுத்தலைவர் சிமியோன் சேவியர் உள்பட தமிழகம் எங்கும் உள்ள மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்

டாக்டர் பாரி வேந்தர் பேச்சு

தமிழ்நாட்டில் ஆறாக ஓடும் சாராயத்தை ஒழிக்கவேண்டும் என்ற இந்த ஆர்ப்பாட்டம் அரசின் காதுக்கு செல்ல வேண்டும் , மதுவால் உயிரிழப்புகளை தடுக்க சாராயத்தை ஒழிக்க வேண்டும்

இந்திய ஜனநாயக கட்சியை பொறுத்த வரை நாம் அடிக்கடி தெருவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ய கூடாது எனும் நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை

தமிழ்நாட்டில் தற்போது நல்ல சாலைகள் ,பள்ளிகள் இருக்கிறதோ, இல்லையே நிறைய மது கடைகள் இருக்கிறது

30ஆயிரம், 40 ஆயிரம் கோடி என
ஓவ்வொரு வருடமும் இலக்குகள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த மதுவால் மக்களின் உயிரை காவு வாங்குகிறது இந்த அரசு

ஓர் அரசு மது பாதிப்பை உணர்ந்து நமக்கு ஓர் நல்லாட்சியை கொடுக்க முன் வர வேண்டும்

மக்கள் அன்றாடிய வாழ்க்கையை நடத்த அவர்களின் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என அக்கறை கொண்டவர்கள் இந்த அரசில் இருப்பார்களே ஆனால் அவர்கள் மது விற்பனையில் ஈடுபட மாட்டார்கள்

தமிழக அரசு இனியும் தாமதிக்காமல்
மது கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

About Author