தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு LKG to 8th தேர்ச்சியை பள்ளிகளே முடிய செய்ய அனுமதிக்க வேண்டும்
தேர்தல் நேரத்தில் பெற்றோர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே 9 முதல் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்…
எல்.கே.ஜி முதல் எட்டாம் ஆம் வகுப்பு வரை மாணவ மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிய செய்ய அனுமதிக்க வேண்டும், தனியார் சுயநிதி பள்ளிகலின்
கடும் நிதி நெருக்கடியை போக்க 2020 – 21 ற்கான RTE கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுருத்தி நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்திலுள்ள தனியார் பள்ளிகலின் இயக்குனரை சந்தித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பாக மனு அளிக்கப்பட்டது…
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் ஆறுமுகம்…
தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை தேர்வு இல்லாமலே அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததை திரும்ப பெற வேண்டும், மேலும் எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அந்தந்த பள்ளிகளே ஆன்லைன் தேர்வு நடத்தி தேர்ச்சியை அறிவிக்க ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்…
மேலும் தேர்தல் நேரத்தில் பெற்றோர்களின் வாக்குகளை பெறுவதற்காகவே 9 முதல் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், தமிழகத்தில் 15000 தனியார் பள்ளிகளின் தாளார்கள் அதன் 7 லடசம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு பரிசிலக்க வேண்டும் என்றார்…
பேட்டி: ஆறுமுகம் மாநில தலைவர்
தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு