எவரெஸ்ட் சிகரத்தை 52 வயதில் அடைந்து சாதனை படைத்த மறைந்த பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ்

353b5d03-4916-4ac4-8342-b739f47a32e2

ஏழு மாதங்களுக்குள் 8000 மீட்டர் உயரமுள்ள இரண்டு சிகரங்கள் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்

52 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது கடுமையான பயணமாக இருந்தது மன உறுதியோடு இந்த சாதனையை செய்ததாக பிரியா செல்வராஜ் பெருமிதம்

சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் இயக்குனரும் மூத்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரியா செல்வராஜ் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தி ஆவார். 52 வயதில் 7 மாதங்களுக்கு உள்ளாக 8,000 மீட்டர் உயரம் உள்ள இரண்டு சிகரங்களில் ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றிருக்கிறார்…

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எவரெஸ்ட் அடைவது இலக்காக இருந்தாலும் உண்மையான மன உறுதி, ஆன்மீக வளர்ச்சி முன்வைத்து இந்த பயணத்தை மேற்கொண்டேன் இருந்தபோதிலும் இந்த பயணம் சவால் நிறைந்ததாக இருந்தது தீவிர பயிற்சி குடும்பத்தினர் உடைய ஒத்துழைப்பு காரணமாகவே இது சாத்தியம் அடைந்தது என தெரிவித்த அவர்,

மலை ஏறும் சாதனையைத் தாண்டி வயது அல்லது சூழ்நிலையை பொருட்படுத்தாமல் லட்சிய இலக்குகளை நோக்கி செல்ல நான் திட்டமிட்டு இருந்தேன் அதற்கு என்னுடைய பயிற்சியாளரும் உறுதுணையாக இருந்தார் எவரெஸ்ட் சிகரம் அதன் பிரம்மாண்டத்திற்கு ஏற்றவாறு ஒருவேளை மன உறுதி தீர்மானம் வலிமை ஆகிய அனைத்தையும் முழுமையாக சோதித்தது இருப்பினும் அந்த இலக்கை அடையும் போது மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது

எந்த ஒரு சாதனையும் செய்வதற்கு வயது முக்கியமில்லை மன உறுதி உடல் நலம் மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.

About Author