ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா எம்.ஜி.ஆர் . திராவிட மக்கள் கழகத்தின் சார்பாக சுந்தர்ராஜன் போட்டி

0
D2F20440-FD22-4128-8ADC-62DA0B39FB85

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா எம்.ஜி.ஆர் . திராவிட மக்கள் கழகத்தின் சார்பாக சுந்தர்ராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முனைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவனத் தலைவரரும்‌, பொதுச் செயலாளருமான முனைவர் சிங்கப்பெருமாள் அவர்கள் தலைமையில் 24 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக்கூடிய 40 வேட்பாளர்களின் அறிமுக விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் பொதுச் செயலாளர் முனைவர் முத்துராமன் சிங்கப்பெருமாள் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் சுந்தர்ராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கடாய் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்த அவர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு தங்கள் கடசிக்கே உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் தங்கள் கட்சியின் சார்பாக தமிழக முழுவதிலும் நாடாளுமன்ற வேட்பாளர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வெற்றி பெற்ற பிறகு அவர்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழக ஆளுநர் உடைய செயல்பாடு வெளிப்படை தன்மையோடு இல்லாமல் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாகவும் முத்துராமன் சிங்கப்பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *