“ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” என்ற அமைப்பின் நீர் சமநிலை முன்மாதிரி திட்டம் தொடங்கி வைப்பு-
சென்னை முழுவதும்
நகரம் தழுவிய நீர் பாதுகாப்பைச் செயல்படுத்தும் திட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வளர்ச்சி இலக்கினை பூர்த்தி செய்கிறது
“ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” – நீர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட பல்துறை குழு நீர் சமநிலைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை காது கேளாதோர் மற்றும் பார்வை திறனற்றவர்களுக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளியில் மாதிரி திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு தொடங்கி வைத்தார். நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் திரு. ஹெங்க் ஓவிங்க் (Henk Ovink), நெதர்லாந்து துணை தூதர் திரு. எவூட் டி விட் (Ewout de Wit), ஜெர்மனி துணை தூதர் திரு. மைக்கேல் குச்லர் (Michaela Küchler), “கேர் எர்த் டிரஸ்ட்” அமைப்பின் சூழலியாளர் மற்றும் நிர்வாக அறங்காவலரான டாக்டர் திருமதி. ஜெயஸ்ரீ வெங்கடேசன் (Dr. Jayshree Vencatesan), ஊஸ் கட்டிட வடிவமைப்பு மற்றும் நகர வடிவமைப்புக்கான இயக்குநரும் மற்றும் “ஆயிரம் ஏரிகள் கொண்ட அபூர்வ சென்னை” அமைப்பின் குழு தலைவருமான செல்வி. ஏவா ஃபென்னஸ் மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்தும் தேசிய திட்ட பணிக்கான தொழில்நுட்ப செயல் இயக்குநர் திரு. டி.பி.மாதுரியா (DP Mathuria) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இத்திட்டம் நெதர்லாந்து நாட்டிற்கான சர்வதேச நீர் விவகாரங்களுக்கான முதல் சிறப்பு தூதர் திரு.ஹெங்க் ஓவிங்கின் முன் முயற்சியாகும். இத்திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டத்தில் சென்னை நகரம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உயர்மட்ட குழுவின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் வாழ்விடங்கள் மற்றும் பின்னடைவில் இருந்து மீட்பு திறன் அமைப்பு (Resilience) ஒருங்கிணைந்து செயற்படுகிறது.
நீர் சமநிலை திட்டமானது நீர் செயல் விளைவுகளையும், உலகின் மிக முக்கியமான நீர் சவால்களை தீர்க்க மக்கள் மையமாகவும், சமூகத்தால் வழிநடத்தப்படும் திருப்புமுனை அணுகுமுறையாகும்.